Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காதலி மீது கோபம்.. அரசு பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசிய விசிக நிர்வாகி..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள நரசிங்க பாளையம் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் அருமை ராஜ். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார். இவரது மகன் பிரேம்குமார் (21) டிப்ளமோ மெக்கானிக் படித்துவிட்டு கூலி வேலை செய்து வருகிறார்.இவர் அதே பகுதியில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்தப் பெண்ணுக்கும் பிரேம்குமாருக்கும்  மன வருத்தம் இருந்ததாகவும், அந்த பெண பிரேம்குமாரிடம் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெளியூர் செல்வதிற்காக அந்த பெண் நரசிங்கபாளையம் காலனி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த பிரேம்குமார் அவ்வழியாக வந்து கொண்டிருந்த காட்டுமன்னார்குடியில் ஜெயங்கொண்டம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் நரசிங்கபாளையம் காலனி பஸ்  நிறுத்தத்திற்கு அருகே வத போது ரோட்டில் பெட்ரோல் குண்டை வீசி உள்ளார். பெட்ரோல் குண்டு வெடித்து சிதறி எரிந்தது.  பிரேம்குமார் வேகமாக வருவதையும் குண்டை வீசுவதையும் பார்த்த டிரைவர் தற்செயலாக பஸ்சை நிறுத்தியதால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பெட்ரோல் குண்டை வீசிய பிரேம்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.  இது குறித்த தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து பிரேம்குமாரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!