அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள நரசிங்க பாளையம் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் அருமை ராஜ். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார். இவரது மகன் பிரேம்குமார் (21) டிப்ளமோ மெக்கானிக் படித்துவிட்டு கூலி வேலை செய்து வருகிறார்.இவர் அதே பகுதியில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்தப் பெண்ணுக்கும் பிரேம்குமாருக்கும் மன வருத்தம் இருந்ததாகவும், அந்த பெண பிரேம்குமாரிடம் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெளியூர் செல்வதிற்காக அந்த பெண் நரசிங்கபாளையம் காலனி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த பிரேம்குமார்
