மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை சிபிஐ கடந்த 26ம் தேதி கைது செய்தது. அன்றைய தினமே அவர் டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அமிதாப் ராவத் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற சிபிஐ-யின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், 3 நாள் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
மூன்று நாள் காவல் நிறைவடைந்ததை அடுத்து இன்று மீண்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜூலை 12-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, கேஜ்ரிவால் மீண்டும் திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
