Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மின்சாரம் தாக்கி அரசு பேருந்து ஓட்டுனர் உயிரிழப்பு…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வேணாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் ,ஒரு மகள் உள்ளனர்.  கடந்த 15 வருடத்திற்கு முன்பு ஜெயங்கொண்டம் அரசு பேருந்து பணிமனையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். தற்போது அரியலூரில் இருந்து கும்பகோணம் செல்லும் பேருந்தை இயக்கி வந்தார்.

பாலமுருகன் தனது பணி முடிந்து வீட்டிற்கு வந்து கட்டிலை பழுது பார்த்ததாக கூறப்படுகிறது.  எதிர்பாராத விதமாக அருகிலிருந்த மின்ஒயரில் மின் கசிவு காரணமாக மின்சாரம் தாக்கியதில் பாலமுருகன்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!