Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை செம்மொழிப்பூங்கா ….. டிசம்பரில் திறக்கப்படும்….. அமைச்சர் நேரு

கோவை மத்திய சிறை மைதானத்தில் செம்மொழி பூங்கா பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதை அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி ஆகியோர் ஆய்வு  செய்தனர்.ஆய்வின்போது கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ,கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  அமைச்சர் கே. என். நேரு நிருபர்களிடம் கூறியதாவது:

168 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இப்பணிகள் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் உத்தரவின் பெயரில் வருகின்ற டிசம்பர் மாதம் பணிகள் முடிவடைந்து திறக்க வேண்டும் என்பதற்காக ஆய்வுகளை மேற்கொண்டோம்.நகராட்சி,மாநகராட்சிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 2500 பேருக்கு தேர்வு நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!