Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை அருகே கிரிக்கெட் போட்டி…. பவர் பாய்ஸ் அணிக்கு கோப்பை வழங்கல்…

தஞ்சை அருகே வல்லம் பேரூர் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசு பெற்ற தஞ்சை பவர் பாய்ஸ் அணிக்கு முதல் பரிசுக்கான வெற்றி கோப்பையை தஞ்சை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் தோ.அருளானந்த சாமி வழங்கினார்.

முதல் பரிசு தொகையான ரூ.50 ஆயிரத்தை தஞ்சை மத்திய மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் கே.எஸ்.டி. தினகர் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் வல்லம் பேரூர் கழக செயலாளர் டி.கே.எஸ்.ஜி கல்யாண சுந்தரம், தஞ்சை மத்திய மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராணி கண்ணன், தஞ்சை ஒன்றிய குழு உறுப்பினர் கே.ஜோதிவேல் வல்லம் பேரூர் அவைத்தலைவர் ஏ.மாணிக்கம், பொருளாளர் முஹம்மது யூசுப், விவசாய அணி அமைப்பாளர் அழகர்சாமி, மாவட்ட பிரதிநிதி சிங் இரா.அன்பழகன், ஒன்றிய பிரதிநிதி சுதாகரன், 10வது வார்டு உறுப்பினர் ஆரோக்கியசாமி. வல்லம் நகர இளைஞரணி அமைப்பாளர் ஞானசேகர், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ், வார்டு செயலாளர்கள் ஜேம்ஸ் செல்வம், விஜயகுமார், ஜெயராமன், வார்டு பிரதிநிதி செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வல்லம் பேரூர் விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் எம்.மணிராஜ் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!