Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வங்கதேச காளி கோவிலுக்கு ….. பிரதமர் மோடி வழங்கிய கிரீடம் திருட்டு

வங்கதேசத்தின் சத்கிரா நகரில் உள்ளது ஜசோரேஸ்வரி கோயில். கடந்த 2021ம் ஆண்டு வங்கதேசத்துக்கு பிரதமர் மோடி சுற்றுப் பயணம் சென்றிருந்தபோது இந்த கோயிலில் உள்ள அம்மனுக்கு கிரீடம் ஒன்றை தானமாக வழங்கியிருந்தார். வெள்ளியில் செய்யப்பட்ட அந்த கீரிடத்தில் தங்கமுலாம் பூசப்பட்டிருக்கும்.

இந்த சம்பவம் குறித்து வங்கதேச போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த திருட்டு சம்பவம் குறித்து வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதுரகம் கவலை தெரிவித்துள்ளது. சத்கிராவின் ஈஸ்வரிபூரில் அமைந்துள்ள இக்கோயில் 12ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இது பின்னர் 13ம் நூற்றாண்டில் லக்‌ஷ்மன் சென் என்பவரால் புதுப்பிக்கப்பட்டதாகவும், அதன்பின் ராஜா பிரதாபதித்யா என்பவர் 16ம் நூற்றாண்டில் இந்த கோயிலை மீண்டும் கட்டியதாகவும் கூறப்படுகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!