Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பழைய பலாத்கார புகார்.. கேரள நடிகர் முகேஷ் திடீர் கைது..

கேரள திரைத்துறையில் நடிகையருக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டியின் அறிக்கை, கடந்த ஆகஸ்டில் வெளியானது. இதில், நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, சிறப்பு விசாரணை குழுவினர் விசாரித்து வருகின்றனர்.  இந்த கமிட்டியில் 2010ம் ஆண்டு தனக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பிரபல நடிகை ஒருவர் பிரபல நடிகரும் கொல்லம் கம்யூ எம்எல்ஏவுமான முகேஷ் மீதும் புகார் அளித்திருந்தார்.  இது தொடர்பாக வடக்கஞ்சேரி மற்றும் மரடு போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த இரு வழக்குகளிலும், கடந்த செப்., 24ல், கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் எம்.எல்.ஏ., முகேஷுக்கு முன்ஜாமின் அளித்தது. இந்நிலையில், நடிகை அளித்த பலாத்கார புகாரில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வான முகேஷை, சிறப்பு விசாரணை குழுவினர்  முறைப்படி கைது செய்தனர். முகேஷ் நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்று இருந்தால்  சிறிது நேரத்துக்கு பின், அவர் விடுவிக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!