Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உள்கட்சி தேர்தல்….. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக  தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது.  கூட்டத்துக்கு பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் பங்கேற்றனர்.  இந்த கூட்டத்தில் அதிமுக கிளை கழகம் முதல்  பொதுச்செயலாளர் வரை உட்கட்சி தேர்தல் நடத்துவது குறித்து  ஆலோசிக்கப்படுகிறது. அத்துடன் 2026 தேர்தல் கூட்டணிக்கு  நடிகர் விஜயை அழைப்பது குறித்தும் முக்கிய ஆலோசனை நடந்து வருகிறது.

வரும் டிசம்பர் மாதம் அதிமுக பொதுக்குழு கூட்டப்படலாம் என்ற நிலையில், அதற்குள் உட்கட்சி தேர்தலை நடத்தி முடிக்க  ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.  கூட்டம் தொடங்கும் முன்தலைமை  கழகத்தில் உள்ள  எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!