Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விசிக நிர்வாகிகளை கைது செய்ய வலியுறுத்தி பாமக ஆர்ப்பாட்டம்… பாமகவினர் கைது..

கடலூர் மாவட்டத்தில் நடந்த வன்முறையை கண்டித்தும் வன்னியர் சங்க மாநிலத் தலைவர் மற்றும் மாவட்ட செயலாளருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்தும் வரும் விடுதலை சிறுத்தை கட்சியினரை கைது செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வன்னியர் சங்க மாநில செயலாளர் தங்க.அய்யாசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் வன்னியர் சங்க மாவட்ட தலைவர் சக்திவேல், பாமக மாவட்ட தலைவர் பழனிசாமி, தஞ்சை மண்டல பொறுப்பாளர் அய்யப்பன் உள்ளிட்ட வன்னியர் சங்க மற்றும் பாமகவை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 60 வன்னியர் சங்க மற்றும் பாமகவினரை காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!