Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கடன் தொல்லை……திருச்சி ஆட்டோ டிரைவர் தற்கொலை

திருச்சி திருவெறும்பூர் அடுத்த பூலாங்குடி காலனியை சேர்ந்தவர் வெற்றிவேல்(38), ஆட்டோ டிரைவர்.   பள்ளி சவாரிக்கு செல்வதற்காக  வெற்றிவேலை  தேடியபோது  அவர் வீட்டின்  சமையலறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தகவல் அறிந்த நவல்பட்டு உதவி ஆய்வாளர்  போலீசாருடன் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி  விசாரணை  நடத்தினார்.  தற்கொலை செய்து கொண்ட  வெற்றிவேலுக்கு  சாந்தி என்ற மனைவியும்,  2 குழந்தைகளும் உள்ளனர். கடன் தொல்லை காரணமாக கணவன், மனைவி இடையே ஏற்பட்ட  பிரச்னையில் மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டதால் வெற்றிவேல் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

_

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!