Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் கார் விபத்தில் கல்லூரி மாணவன்-மாணவி பலி… 3 மாணவிகள் படுகாயம்..

கரூரில், தனியார் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் சென்ற கார் விபத்தில் சிக்கியதில் ஒரு மாணவன், ஒரு மாணவி என இரண்டு பேர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு: மூன்று மாணவிகள் படுகாயம்.

கரூர் மாவட்டம், தளவாபாளையம் பகுதியில் தனியார் ( எம்.குமாரசாமி) பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

இந்த கல்லூரியில் இன்று வகுப்புகள் முடிந்த பிறகு வீட்டுக்கு செல்வதற்காக ஒரு காரில் ஒரு மாணவன் மற்றும் நான்கு மாணவிகள் என ஐந்து பேர் காரில் கரூர் நோக்கி கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மண்மங்கலம் அருகே சென்று கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை சென்டர் மீடியம் ஏறி அருகில் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் கார் ஓட்டி வந்த கௌதமன் என்ற கல்லூரி மாணவர் மற்றும் மது பிரியா என்ற மாணவியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

மேலும் காமினி,, அனுசுயா, தேவதர்ஷினி என்ற மூன்று மாணவிகள் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்கள் 5 பேரூம் தளவாபாளையத்தில் உள்ள தனியார் (எம்.குமாரசாமி) பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு EEE படித்து வந்துள்ளனர்.

இறந்த மாணவன் மற்றும் மாணவி உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. விபத்து குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலை விபத்தில் இரண்டு கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!