Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கடலை மிட்டாய் கடையில் பணம் திருட்டு…

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் கலைக்கோவன் ( 29)இவர் திருச்சி சங்கிலியாண்ட புரம் குமரன் ரோடு பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கடலை மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்தநிலையில் மர்ம ஆசாமிகள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.15 ஆயிரம் பணத்தை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிவிட்டனர். இச்சம்பவம் குறித்து கலைக்கோவன் பாலக்கரை குற்ற பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடலைமிட்டாய் கடையில் பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!