Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் தமிழக அரசு அறநிலையைத்துறை கண்டித்து ஆர்பாட்டம்…

கரூரில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு தமிழக அரசு அறநிலையத்துறையை கண்டித்து இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஜெயம். கனேஷ் தலைமையில் நடைபெற்றது.

இதில் தமிழக அரசு அறநிலையத்துறை தமிழக கோவில்களில் தரிசனம் கட்டணம் வசூல் செய்யும்படியான எந்தவித சட்டப்பிரிவும் இல்லை ஆனால் இந்து சமய அறநிலையத்துறை என்ற பெயரில் இருந்து கொண்டு இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் சிறப்பு தரிசன கட்டணம் வசூல் செய்து வருகின்றனர்.

பழனி கோயிலின் உண்டியல் வருமானமே ஆண்டுக்கு 103 கோடியே 24 லட்சம் ரூபாய் எனில் தமிழகத்தில் உள்ள மொத்த கோயில்களின் உண்டியல் வருமானம் ஆண்டிற்கு 2,000 கோடிக்கு மேல் வரலாம், பல்லாயிரம் கோடி வருமானம் வந்தும் பக்தர்களிடம் தரிசனம் கட்டணம் வசூலிப்பதில் எந்தவித நியாயம் என்று தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி சார்பில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

error: Content is protected !!