Skip to content

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பூமத்திய ரேகையை ஒட்டிய மேற்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளிலிருந்து தெற்கு கேரளா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 13-03-2025 மற்றும் 14-03-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

15-03-2025 மற்றும் 16-03-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 17-03-2025: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 18-03-2025 மற்றும் 19-03-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!