Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பட்டா கேட்டு வந்த மக்களிடம் அதிகாரி அவமரியாதை – கருணைக் கொலை கோரி கண்ணீர்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமம் ஊராட்சி காளான் வட்டம் உட்பட்ட ஏரி மற்றும் அதனைச் சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்த நிலையில் காலங்காலமாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் ஜமீன் ரயத்துவாரி பட்டா வைத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்‌ காலப்போக்கில் அதில் 150க்கும் மேற்பட்டோருக்கு வருவாய்த் துறையினரால் பட்டாக்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அங்குள்ள 18 குடும்பங்களுக்கு தற்போது வரை பட்டா வழங்கப்படவில்லை என

கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரிகளில் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் 15 க்கும் மேற்பட்டோர் மனு அளிக்க வந்தனர்.

அப்போது இந்த பொதுமக்களின் மனுவை மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம் விசாரித்தார். அப்போது கண்டிப்பாக உங்களுக்கு நீர்நிலை புறம்போக்கு இடத்தில் பட்டா வழங்க வாய்ப்பில்லை மாற்று இடத்தில் கொடுக்க ஏற்பாடு செய்கிறோம் என பேசினார்.

அந்த நேரத்தில் கூட்டத்தில் பொது மக்களில் ஒருவரான ராஜா என்பவர் திடீரென அதே இடத்தில் 150க்கும் மேற்பட்டோருக்கு எப்படி பட்டா கொடுத்தீர்கள் என கேள்வி கேட்டபோது ஆத்திரமடைந்த மாவட்ட வருவாய் அலுவலர் உங்களையெல்லாம் யாரு உள்ளே விட்டது. வெளியே போயா, போலீஸ் இவங்கள வெளிய அனுப்புங்க என ஒருமையில் பேசினார்.

இதன் காரணமாக பொதுமக்களுக்கும் மாவட்ட வருவாய் அலுவலருக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து பட்டா கேட்டு வந்த பொதுமக்கள் அங்கிருந்து வெளியே சென்றனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த பொதுமக்கள்

ஐந்து தலைமுறைகளாக பாட்டா கேட்டு வந்துள்ளோம் ஆனால் இதுவரை கொடுக்கவில்லை ஆனால் அதே இடத்தில் 150க்கும் மேற்பட்டோருக்கு பட்டா வழங்கியுள்ளனர்‌.

ஆனால் இதுவரை இந்த 18 குடும்பத்தினருக்கு மட்டும் பட்டா வழங்க அரசாங்கம் மறுக்கிறது. தயவுசெய்து எங்களை கருணை கொலை என செய்யுங்க அப்படின்னா கூட நிம்மதியா போய் சேர்ந்து விடுகிறோம் என கண்ணீர் மல்க ஆதகமாய் பேசியது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!