புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் மு.அருணா மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின்சார்பில் ஐந்து மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களை வழங்கினார்.உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப்ரசூல் , மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், தனித்துணை ஆட்சியர்( சமூக பாதுகாப்பு திட்டம்) அ.ஷோபா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் , மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.மேலும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின்சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு நலத்திட்டங்கள் குறித்த தெருமுனை விழிப்புணர்வு பிரசார நடமாடும் வாகனத்தினை ஆட்சியர் மு.அருணா கொடியசைத்து துவக்கி
வைத்தார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் , மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்க. பிரேமலதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
வைத்தார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் , மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்க. பிரேமலதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.