Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிரசன்ன மாரியம்மன் கோயிலில் பவளக்காளி ஆட்டத்துடன் ஊர்வலம்…

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரின் மையப்பகுதி வண்டிக்காரத் தெருவில் பிரசித்தி பெற்ற பிரசன்ன மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலில் தை‌ கடைவெள்ளியை முன்னிட்டு ஆண்டுதோறும் பால்குடம் திருவிழா பூக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு இக்கோயிலில் தை மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 39-வது ஆண்டு பால்குட திருவிழா இன்று விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி விரதமிருந்த ஏராளமான பக்தர்கள்

மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்திலிருந்து பால்குடங்களை எடுத்தும், உடலில் அலகு குத்தியும் மாயூரநாதர் கோயில்‌ யானை அபயாம்பிகை மற்றும் நாட்டியகுதிரை முன்னே செல்ல ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். வழியெங்கும் நடைபெற்ற பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டம் மற்றும் காளியாட்டத்தை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். பின்னர் பிரசன்ன மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!