Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் காவிரி நீருக்கு மலர்தூவி வரவேற்பு…

தஞ்சாவூர் மாவட்டம் , கும்பகோணத்திற்கு வந்த காவிரி நீருக்கு மலர்கள் தூவி ஆரத்தி எடுத்து வரவேற்பு டெல்டா மாவட்டத்திற்கு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை கடந்த 12-ந்தேதி திறக்கப்பட்டது. காவிரி நீர் கல்லணைக்கு வந்து அடைந்தது. கல்லணையில் இருந்து கடந்த 15ஆம் தேதி தண்ணீர்

திறக்கப்பட்டது. இன்று மாலை காவிரி நீர் கும்பகோணம், பகுதிகளை கடந்து சென்றது. அப்போது கும்பகோணம் சோலையப்பன் தெரு பகுதியில் உள்ள விஜயீந்திர மடம் சார்பில் காவிரி படித்துறையில் காவிரி ஆற்றில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்து காவிரி நீரில் பாலை ஊற்றி தீபாராதனை காண்பித்தனர். பின்னர் மலர் தூவியும், தேவார பாடலை பாடியும் காவிரி நீரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

error: Content is protected !!