Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

85வயது மூதாட்டி கொலை: மன்னார்குடி அதிமுக நிர்வாகி கைது

திருவாரூர் மாவட்டம்  மன்னார்குடி அருகே உள்ள  வெட்டிக்காடு என்ற கிராமத்தை சேர்ந்தவர்  முத்துலட்சுமி(85). இவர் தனியாக வசித்து வந்தார். இவரு பக்கத்து வீட்டுக்காரர்  ஆனந்த்பாபு(33). அதிமுக  ஐ.டி. விங். நிர்வாகி.

மாடு மேய்ந்தது தொடர்பாக   மூதாட்டி முத்துலட்சுமிக்கும், ஆனந்த்பாபுவுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆனந்த்பாபுவும், அவரது தாயார்  மலர்க்கொடியும்(70)  சேர்ந்து முத்துலட்சுமியை தாக்கி உள்ளனர்.

படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு  நேற்று இறந்தார். இது தொடர்பாக  வடுவூர் போலீசார்    வழக்குப்பதிவு செய்து   அதிமுக நிர்வாகி ஆனந்த்பாபுவை கைது செய்தனர்.

error: Content is protected !!