Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாபநாசம் அருகே பருத்தி மறைமுக ஏலம்…

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் இயங்கி வரும் பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் நடந்த பருத்தி மறைமுக ஏலத்தில் பாபநாசம், இதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து 400 விவசாயிகள் பருத்தியை எடுத்து வந்தனர். இதில் 12 வணிகர்கள் கலந்துக் கொண்டு அதிகப் பட்சம் கிலோ ஒன்றிற்கு ரூ 75.89, குறைந்தப் பட்சம் ரூ 62, சராசரி ரூ 68.30 என விலை நிர்ணயித்தனர். ஏலத்திற்கு விற்பனைக் குழு செயலர் சரசு தலைமை வகித்தார். விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி முன்னிலை வகித்தார். பட விளக்கம்: பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறை முக ஏலம் நடந்தது.

error: Content is protected !!