Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் தற்கொலை…

தஞ்சை மாரியம்மன் கோவில் மேல சித்தர்காடு பகுதியை சேர்ந்தவர் மா.முருகானந்தம் (வயது 49). இவர் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள விவசாய அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் முருகானந்தம் உடல்நிலை பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தார். இதில் மன உளைச்சலில் இருந்து வந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முருகானந்தம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!