Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஈரோட்டில் வாக்கு சேகரிப்பது எப்படி? 20ம் தேதி ஓபிஎஸ் ஆலோசனை

அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை நீடிக்கும் சூழலில், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் இடைக்காலப் பொதுச் செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்றார். மேலும், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கினார். இதை எதிர்த்து பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், அதிமுகவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி தரப்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார்.

இந்நிலையில், பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் வரும் 20ம் தேதி நடைபெறும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதில் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல், உச்ச நீதிமன்ற வழக்கு தொடர்பாக ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்னரசுக்கு ஆதரவாக  தொகுதிக்கு சென்று பிரசாரம் செய்வதா, அல்லது சமூக வலைதளங்கள் மூலம் இரட்டை இலைக்கு வாக்கு கேட்கலாமா என்பது குறித்து இதில் முக்கியமாக ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!