தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக வாரம்தோறும் சனிக்கிழமைகளில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பல்வேறு மாவட்டங்களில் மக்களை சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் நேற்று கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏமூர் புதூர் பகுதியில் வசிக்கும் பிரியதர்ஷினி வயது 35 அவருடைய மகள் தரணிகா வயது 14 ஆகியோர் மற்றும் சந்திரா வயசு 48 மற்றும் ஏமூர் பகுதியில் வசிக்கும் இருவர் நேற்று இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தனர்.
அதைத்தொடர்ந்து இன்று காலை ஏமூர் புதூர் சுடுகாட்டில் மூன்று பேர் உடல் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் ஏமூர் புதூர் பகுதியைச் சேர்ந்த ஐந்து நபர்கள் உயிரிழந்த நிலையில் மூன்று நபர்களின் உடல் ஏமூர் புதூர் சுடுகாட்டில் உடல் தகனம் செய்யப்பட்டது .
மற்ற இருவரின் உடல் பாலபுரம் பகுதியில் உள்ள மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒரே ஊரில் சேர்ந்த ஐந்து நபர்கள் நேற்று மூச்சுத் திணறல் காரணமாக உயர்ந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
