திருச்சிஏர்போட்டில் சார்ஜாவில் இருந்து வந்த பயணி மாயம்
நாகை மாவட்டம் வேதாரணியம் பகுதியை சேர்ந்தவர் சேகர் வயது 29 இவர் கடந்த எட்டாம் தேதி சார்ஜாவில் இருந்து திருச்சி வருக புரிந்தார் திருச்சி விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து சொந்த ஊர்வானா நாகை மாவட்டத்திற்கு செல்ல வேண்டும்.நிலையில் திருச்சி வந்த சேகர் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து யாரும் ஏறு சென்றுள்ளார்.ஆனால் அவர் ஊருக்கு செல்லவில்லை மாறாக எங்கு சென்றார் என்று தெரியவில்லை இது குறித்து ஏர்போர்ட் போலீசில்உறவினர் கஸ்தூரி என்பவர் ஏர்போர்ட் போலீசில் புகார் கொடுத்துள்ளார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பயனே மாயமானது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
இதேபோன்று திருச்சி எடத்தெரு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் ரூபன் ராஜ் (வயது 26) இவர் திருச்சி – தஞ்சை ரோட்டில் உள்ள ஒரு மளிகை கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 3ந்தேதி திடீரென்று இரவு மளிகை கடையில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை.மேலும் அவர் வீட்டுக்கும் செல்லவில்லை. இந்நிலையில் பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் ஜஸ்டின் ரூபன் ராஜ் கிடைக்கவில்லை. இதையடுத்து அவருடைய சகோதரர் பிரான்ஸ் மரியஜெரால்டு பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன ஜஸ்டின் ரூபன் ராஜயை தேடி வருகின்றனர்.
காய்கறி கடை பெண் ஊழியரிடம் ரூபாய் 50 ஆயிரம் பணம் திருட்டு
மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு திருச்சி நவ14 – திருச்சி தென்னூர் சாரதி நகரை சேர்ந்தவர் ஸ்ரீ முத்துக்குமார் இவரது மனைவி செல்வி.
காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு காய்கறி கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் கடந்த பத்தாம் தேதி வேலைக்கு சென்ற செல்வி தான் அடகு வைத்து இருக்கும் நகையை மீட்க ரூபாய் 50 ஆயிரம் பணத்தை ஒரு பையில் போட்டு மளிகை கடைக்கு சென்று உள்ளார். பிறகு அங்குள்ள கூடையில் பணப்பையை வைத்துவிட்டு வேலை செய்து கொண்டிருந்தார். நீண்ட நேரத்துக்கு பிறகு கூடையில் உள்ள பையை பார்த்த பொழுது காணவில்லை. மேலும் அதிலிருந்த ரூபாய் 50 ஆயிரம் பணமும் காணாமல் போய் இருப்பது கண்டு அதிர்ச்சிடைந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது கணவர் ஸ்ரீ முத்துக்குமார் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ 50 ஆயிரம் பணத்தை திருடிய மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.
இரும்பு கம்பி திருடிய 2 பேர் கைது
திருச்சி பாலக்கரை பள்ளிவாசல் தெரு சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 42)இவர் கார் டிரைவர். கடந்த 12 ந் தேதி இவரது வீட்டிற்கு வெளியே ஒரு சாக்கு பை இருந்தது அதில் இரும்பு கம்பிகள் வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இரண்டு மர்ம ஆசாமிகள் அந்த சாக்கு முட்டையை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.இந்த சம்பவம் குறித்து பார்த்தசாரதி பாலக்கரை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார், இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பீமநகர் கூனிபஜார் பகுதியை சேர்ந்த ரவீந்தர் (வயது 20) சூசை மணிகண்டம் (வயது 19) ஆகிய இருவரும் சேர்ந்து பார்த்தசாரதி வீட்டுக்கு வெளியே இருந்த இரும்பு சாக்கு முட்டையில் இருந்த இரும்பை திருடி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர்

