Skip to content

மதுபான கடையை மூட கோரி-தவெகவினர் திடீர் மறியல்-130 பேர் கைது

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோவில் அருகில் நேற்று தனியார் மதுக்கடை பார் திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திறக்கப்பட்ட கடையை மூட வலியுறுத்தியும் , இன்று தமிழக வெற்றி கழகத்தினர் உச்சி பிள்ளையார் கோவில் அருகே உள்ள மது கடையை முற்றுகையிட முயன்றனர்.

காவல்துறையினர் தடுப்புகள் ஏற்படுத்தியதால் , தமிழக வெற்றி கழகத்தினர் Bar க்கும் முன்னதாகவே காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர் . அங்கு தமிழக அரசுக்கு எதிராக தமிழக வெற்றி கழகத்தினர் முழக்கங்கள் எழுப்பினர். இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட சுமார் 130 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

error: Content is protected !!