Skip to content

பெட்ரோல் பங்கில் பணம் கொள்ளை… திருச்சி க்ரைம்

முதியோர் இல்லத்தை நடத்தி வந்த நபர் மூச்சு திணறி சாவு

ஸ்ரீரங்கம், கீதாபுரத்தை சேர்ந்தவர் ராபின் (32) இவர் அந்த பகுதியில் முதியோர் இல்லம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ராபினுக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்படும். இதைத்தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று திடீரென்று அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து ஆபத்தான நிலையில் ராபின் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் குழுவினர் ராபின் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இச்சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி தில்லைநகர் 7வது கிராஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் உமையாள் . இவரது மகள் விசாலாட்சி (வயது 28) இவருக்கும் காரைக்குடி கொத்தமங்கலத்தை சேர்ந்த முத்து ( 30) என்பவருக்கும் கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி திருமணம் நடைபெற்றது..முத்து சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார் இந்த நிலையில் திருமணம் முடிந்து விசாலாட்சி சென்னையில் கணவர் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் அவருக்கு சென்னையில் இருப்பது பிடிக்காத காரணத்தால் அண்மையில் கடந்த சில நாட்களுக்கு முன்ப திருச்சியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். இதையடுத்து நேற்று தாய் உமையாள் காரைக்குடியில் உள்ள உறவினர் இறுதி சடங்கு நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். பிறகு வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது மகள் விசாலாட்சி மின்விசிறியில் சேலையில் தூக்கில் பிணமாக தொங்கி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துபதறி துடித்தார். பிறகு அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தார். அங்கு விசாலட்சியை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் குழுவினர் விசாலாட்சி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து உமையாள் தில்லைநகர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாலட்சமி இறந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். திருமணம் ஆன 2 1/2 மாதத்தில் புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் பங்கில் ரூ.26 ஆயிரம் பணம் கொள்ளை
திருச்சி, பிராட்டியூர் தீரன் நகர் பகுதியில் பெட்ரோல் பங்க் உள்ளது இந்த பெட்ரோல் பங்கில் நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்த பெரியார் செல்வன் வயது 40 என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார் இந்த நிலையில் நேற்று முன்தினம் பெட்ரோல் பங்கில் வசூலான ரூ 26 ஆயிரத்து 298 பணத்தை ஒரு பையில் பெரியார் செல்வன் வைத்திருந்தார். அப்பொழுது ஊழியர் ஒருவர் வாகனம் ஒன்றுக்கு பெட்ரோல் நிரப்பி கொண்டு இருக்கும் பொழுது 2 மர்ம ஆசாமிகள் பெட்ரோல் பங்க் அருகில் வந்து பெட்ரோல் போடுவது போல் நின்று கொண்டு பண பை அருகில் சென்று திடீரென்று பணப்பையை திருடிக் கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில்இருசக்கர வாகனத்தில் தப்பி சென்று விட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெரியார் செல்வன் எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெட்ரோல் பங்கில் பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர்

error: Content is protected !!