Skip to content

ஐடி கம்பெனி ஊழியர் தற்கொலை…திருச்சி க்ரைம்

திருச்சி, திருவெறும்பூர் மலைக்கோவில் வ உ சி தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 55) இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார் இந்நிலையில் கடந்த பல வருடங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்துவிட்டனர் இந்நிலையில் தனியாக வசித்து வந்த சுரேஷ் கடந்த 20ந்தேதி திருவரங்கம் சாத்தார வீதி வெள்ளை கோபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டு இருந்தாள் அப்பொழுது சுரேஷ் திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். இதனை பார்த்த அருகில் உள்ளவர்கள் அவரை ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஐடி கம்பெனி ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை

திருச்சி உறையூர் பாண்டமங்கலம் தெற்கு வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (33)
ஐ டி ஊழியர் இவரது மனைவி சாந்தி (28) இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார்.லோகநாதன் ஐடி கம்பெனியில் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் பணி செய்து வந்தார் .
இந்நிலையில் அவர் கடன் வாங்கியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் காணப்பட்ட லோகநாதன் நேற்று வீட்டில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி சாந்திஉடனடியாக உறையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் தகவல் இருந்து போலீசார் சம்படுத்த விருந்து சென்று தூக்கில் பிணமாக தோன்றிய லோகநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சார்சு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி சாந்தி உறையூர் போலீஸ் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து லோகநாதன் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!