அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் பிரேவர்டு நகரில் சிறிய ரக விமானத்தில் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், நெடுஞ்சாலையில் அவசர அவசரமாக விமானம் தரை இறக்கப்பட்டது. அப்போது சாலையில் சென்ற கார் மீது மோதியதில் காரை ஓட்டிச் சென்ற 57 வயது பெண் லேசான காயம் அடைந்தார். விமானத்தில் பயணித்த யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

