Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சூலூர் சிறுமி கொலை வழக்கில் இன்று தீர்ப்பு: குற்றம் சாட்டப்பட்ட மோகன் ஆவேசம்!

கோவை சூலூர் 10 வயதுச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கு : இன்று தீர்ப்பு வழங்கும் போக்சோ சிறப்பு நீதிமன்றம்! – ‘கார்த்தியைப் பிடித்துக் கொடுத்ததே நான் தான்; அவனது நண்பன் எனக் கூறாதீர்கள்!’ எனக் குற்றம் சாட்டப்பட்ட மோகன் ஆவேசம்!”

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்ட போது செய்தியாளர்களிடம் கதறிய மோகன்: கோவை நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

​ தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்திய கோவை சூலூர் அருகே கண்ணம்பாளையம் 10 வயதுச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ (POCSO) சிறப்பு நீதிமன்றம் இன்று (நவம்பர் 27) தீர்ப்பு வழங்க உள்ளது.

​இந்நிலையில், தீர்ப்பிற்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான மோகன், “கார்த்தியைப் பிடித்துக் கொடுத்ததே நான் தான்; அவனது நண்பன் என என்னைக் கூறாதீர்கள்” எனச் செய்தியாளர்களிடம் ஆவேசமாகக் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

​
கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 10 வயதுச் சிறுமி, கடந்த மே மாதம் 21-ஆம் தேதி தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டு இருந்த போது திடீரென மாயமானார்.

பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில், கண்ணம்பாளையம் குளம் அருகே உள்ள தென்னந்தோப்பில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.

​பிரேதப் பரிசோதனையில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டது.

​விசாரணையில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி கார்த்திக், சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதும், அதற்கு மோகன் என்பவர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

இதை அடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
​
கோவை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹரிஹரன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை மிகத் தீவிரமாக நடைபெற்று வந்தது.

​போலீசார் 21 நாட்களிலேயே 819 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். சிசிடிவி (CCTV) காட்சிகள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன.

​அரசுத் தரப்பு வழக்கறிஞர் 250 பக்க எழுத்துப்பூர்வ வாதங்களைத் தாக்கல் செய்த நிலையில், அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு இன்றைக்கு (நவம்பர் 27) ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

​“ கார்த்தியைப் பிடித்துக் கொடுத்ததே நான் தான்” – நீதிமன்ற வளாகத்தில் மோகன் ஆவேசம்:

தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குற்றம் சாட்டப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன் ஆகிய இருவரும் இன்று கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
​அப்போது நீதிமன்ற வளாகத்தில் நின்று இருந்த செய்தியாளர்களைப் பார்த்து மோகன் ஆவேசமாகப் பேசியதாவது:

​”கார்த்தியைப் பிடித்துக் கொடுத்ததே நான் தான். அவனது நண்பன் என்று என்னைக் கூறாதீர்கள்; நண்பன் என்று கூறுவது தவறு.”
​”கார்த்தி என் வீட்டுப் பெண்களுடன் தொடர்பில் இருந்தான். எனக்கு நீதி வேண்டும் என்று நான் போராடி வருகிறேன். செய்தியாளர்கள் நீங்களும் நீதிக்காகப் போராடுங்கள்.”
​”என் மீது எந்தக் குற்றமும் இல்லை; இந்த வழக்குக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை நீதிபதியிடமும் நான் தெரிவிக்கிறேன்” எனக் கூறினார்.

​கடந்த முறை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போதும் இதேபோன்று தனக்குச் சம்பந்தமில்லை என மோகன் கூறியிருந்த நிலையில், இன்றும் அவர் செய்தியாளர்களிடம் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தீர்ப்பையொட்டி கோவை நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

error: Content is protected !!
Secret Link