Skip to content

நேருக்கு நெருக்கடி கொடுத்தால்- மனம் திறந்த அமைச்சர் கே.என்.நேரு

நேருவுக்கு நெருக்கடி கொடுத்தால் திமுகவை விழித்து விடலாம் என்ற எண்ணத்தோடு மத்திய அரசு என் மீது வழக்கு போடுகிறது. மனம் திறந்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உறையூர் பகுதிகளில் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி கூட்டத்தில் கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு அப்பகுதி மக்களிடம் உரையாற்றினார் நிகழ்ச்சியில் பேசி அமைச்சர் கே.என்.நேரு :

அதிக ஆதரவு கொடுத்து என்னை வெற்றி பெற செய்து இருக்கிறீர்கள்.
மத்திய அரசு என் மீது வழக்கு ஒன்று தொடுத்துள்ளது.அந்த வழக்கில் நாங்கள் வெற்றி பெற்று விட்டோம்.ஆனாலும் தொடர்ந்து அந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கூறி தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறது.
நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் என்னால் விரிவாக பேச முடியாது.
நான் எந்த தவறும் செய்யவில்லை ஆனால் வேண்டுமென்றே மத்திய அரசு நேருவை அடித்தால் திமுகவை வீழ்த்தி விடலாம் என்ற நோக்கத்தோடு அந்தப் பணியை செய்து கொண்டிருக்கிறது.

உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் எந்த தவறும் செய்யவில்லை, இனியும் செய்யவும் மாட்டேன் என உறுதி கூறுகிறேன் என்றார்.

error: Content is protected !!