தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்றவர் மீது முறிந்து விழுந்த வேப்பமரம்..
பலத்த காயங்களுடன், காயமடைந்தவர் அரசு மருத்துவமனையில் அனுமதி..
தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையான 108-சிவாலயம் பகுதியில் வேப்பமரம் ஒன்று திடீரென முறிந்து விழுந்தது.
அப்போது அவ்வழியாக பாபநாசத்தில் இருந்து அய்யம்பேட்டை நோக்கி, பாபநாசத்தை சேர்ந்த ஜாபர்அலி (56) மற்றும் அவரது மனைவி பதுருநிஷா (48) சென்று கொண்டிருந்தனர்.
இவர்கள் 108-சிவாலயம் பகுதி வந்தடைந்த உடன் பாபநாசம் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடல் ஓரம் இருந்த வேப்பமரம் ஒன்று திடீரென முறிந்து இரண்டு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது விழுந்தது..
இதில் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்த்திய நிலையில், ஜாபர்அலி பலத்த காயம் அடைந்தார். அவரது மனைவி சிறு காயங்களுடன் மீட்கப்பட்டார். இவர்களை மீட்டு அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த பாபநாசம் போலீசார் சாலையில் விழுந்த வேப்ப மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது..
பாபநாசம் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் சுற்று சுவர் எழுப்புவதால் அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. விழும் நிலையில் உள்ள மரத்தை வெட்டாமல் தாமதம் செய்தது விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

