Skip to content

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தர்மபுரி மாவட்டம் கொண்டகரஅள்ளியை சேர்ந்த வெங்கடேசன், விவசாயி. இவரது மகள் காவியா (17). இவர் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு பாராமெடிக்கல் மயக்கவியல் படித்து வந்தார். மயக்கவியல் படிப்பு ஆங்கிலத்தில் இருந்ததால் காவியாவால் படிக்க முடியாமல் தவித்துள்ளார். இதுகுறித்து அவர் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதற்கு பெற்றோர் உன்னால் படிக்க முடியும் என கூறி அவரை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த காவியா நேற்று முன்தினம் வீட்டில் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

error: Content is protected !!