Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இலங்கையில் இருந்து தங்கம் கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் பெண் பயணி அதிரடி கைது

இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.93 லட்சம் மதிப்பிலான தங்க பசையை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை, சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது, சுற்றுலா முடித்துவிட்டு நாடு திரும்பிய சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவரது உடைமைகளை பரிசோதனை செய்தபோது, அதில் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க பசை கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட இந்தத் தங்கத்தின் எடை 125 கிராம் என்றும், அதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 93 லட்சம் ரூபாய் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, அந்தப் பெண்ணைக் கைது செய்த அதிகாரிகள், அவரிடம் இருந்த தங்கத்தைப் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!