தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சொர்ணக்காடு ஊராட்சி, படப்பனார்வயல் வடக்கு ஆற்றங்கரை சாலை ரூபாய் 62.10 லட்சம் மதிப்பீட்டிலும், பட்டத்தூரணி ஆற்றங்கரை இணைப்பு சாலை ரூ.22.10 மதிப்பீட்டிலும், பறையன்குளம் – கோனக்குளம் இணைப்பு சாலை ரூ.83.78 லட்சம் மதிப்பீட்டிலும், வளப்பிரமன்காடு ஊராட்சி, வளப்பிரமன்காடு – கொல்லைக்காடு சாலை ரூ.47.32 லட்சம் மதிப்பீட்டிலும், தென்னங்குடி ஊராட்சி, எல்.வி பாலம் புதிய சாலை ரூ.20.80 லட்சம் மதிப்பீட்டிலும், காலகம் ஊராட்சி, கொன்றைக்காடு- திருப்பூரணிக்காடு இணைப்பு சாலை ரூபாய் 26.93 லட்சம் மதிப்பீட்டிலும், காலகம் ஊராட்சி, காலகம் சத்திரம் – ஆனைக்காடு ஆதிதிராவிடர் ஆற்றங்கரை இணைப்புச் சாலை ரூ.44.95 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.3 கோடியே 7 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பீட்டிலும் புதிய சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.
இதனை, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் தலைமை வகித்து அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், திமுக பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலியமூர்த்தி, நாகேந்திரன், ஒன்றியப் பொறியாளர் சுரேஷ் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, குக்கிராமங்களுக்கும் சாலை வசதி செய்து தரப்பட்டுள்ளதால், கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

