Skip to content

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

மிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், அரியலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!