திருச்சி கருமண்டபம் வசந்த நகர் நான்காவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (52. )ரியல் எஸ்டேட் புரோக்கர் . இவரது மைத்துனர் கேகே நகர் பாரி நகரை சேர்ந்த முத்தமிழ் குமரன் (வயது 36) என்ற ரவுடிக்கும் பணம் ,கொடுக்கல் வாங்கலில் முன் விரோதம் இருந்தது இந்நிலையில் முத்தமிழ்குமரன் ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு டிச 24ந் தேதி முத்தமிழ் குமரனின் தூண்டுதலில் பேரில் முத்தமிழ் குமரனின் மனைவி மாதுஷா, கருமண்டத்தை சேர்ந்த நெட்ட கார்த்தி, தேனி மாவட்டத்தை சஞ்சய் மெர்வின் ஆகியோர் சேர்ந்து ராஜனுக்கு ரூ 5 லட்சம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து ராஜன் பணம் தர மறுத்தத்தை தொடர்ந்து ஆத்திரமடைந்த முத்தமிழ் குமரனின் ஆதரவாளர் புது ஆல்பா நகரை சேர்ந்த கார்த்தி என்கிற நெட்ட கார்த்தி (வயது 26, )ராஜனை அரிவாளால் வெட்டினார். இதில் அவரது முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது இது குறித்து ராஜன் கொடுத்த புகாரின் பேரில் முத்தமிழ் குமரன் அவரது மனைவி மாதுஷா, கார்த்தி என்கிற நெட்ட கார்த்தி ,தேனி மாவட்டம் உத்தமபாளையம் சஞ்சய் மெர்வின் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து சஞ்சய்யை மட்டும் கைது செய்தனர் மற்ற 3 பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

