Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஹம்ச வாகனத்தில் வீதி உலா…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இந்த திருவிழா வருகிற மார்ச் 3ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்திருவிழாவின் முதல் நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து தோளுக்கினியான் பல்லக்கில் காலை 7. 30 மணிக்கு புறப்பட்டு ரெங்கவிலாஸ் மண்டபத்திற்கு காலை 8. 15 மணிக்கு வந்தடைந்தார்.  மேலும் அங்கிருந்தவாறு  பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் மாலை 6. 30 மணிக்கு ஹம்ச வாகனத்தில் புறப்பட்டு உள்வீதிகளில் வலம் வந்து இரவு 7. 45 மணிக்கு வாகனத்தில் மண்டபம் வந்தடைந்தார். வாகன மண்டபத்தில் இருந்து இரவு 8. 30 மணிக்கு புறப்பட்டு இரவு 9. 15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!