கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் உக்ரைன்-ரஷியா போரில், உக்ரைன் மீது ரஷியா இன்று (செப்.16) நடத்திய டிரோன் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். உக்ரைனின் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் மாகாணத்தில் உள்ள நிகோபொல் நகரைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மேலும் 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆயுத ஆதரவோடு உக்ரைன் தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில், ரஷியாவின் இந்த திடீர் வான்வழி தாக்குதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
