தமிழகத்தில் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதாகவும், இதுவரை 15,933-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் அரசு மெத்தனம் காட்டுவதாக விமர்சித்த அவர், கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். வீடு வீடாக கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் மருத்துவ முகாம்களை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
