Skip to content

ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி லஞ்சம்: சிக்கியதும் சீன் போட்ட இன்ஸ்பெக்டர்

கர்நாடக மாநிலம் கே.பி.அக்ரஹாரா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜு, ரியல் எஸ்டேட் தொழிலதிபர் அக்பர் என்பவரை ஒரு மோசடி வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதில் முதற்கட்டமாக ரூ.1 லட்சம் கொடுக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள பணத்தைக் கேட்டு இன்ஸ்பெக்டர் வற்புறுத்தியுள்ளார்.

இது குறித்து அக்பர் அளித்த புகாரின் பேரில், லோக் ஆயுக்தா போலீசார் விரித்த வலையில் கோவிந்தராஜு சிக்கினார். சமராஜ்பேட் பகுதியில் வைத்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அக்பரிடம் இருந்து வாங்கியபோது, மறைந்திருந்த லோக் ஆயுக்தா அதிகாரிகள் அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டபோது, இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜு தப்பிக்க முயன்று குழந்தை போல அலறி ஆர்ப்பாட்டம் செய்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!