Skip to content

ரஷ்யாவில் வாட்ஸ் அப் செயலிக்கு தடை

அமெரிக்காவைச் சேர்ந்த மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலியை உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ‘MAX’ என்ற செயலியை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல அந்நாடு முயற்சி செய்கிறது. தற்போது ரஷ்யாவில் 10 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
இதை ஒழித்துக்கட்டும் வகையில் , நாடு முழுவதும் வாட்ஸ்அப்பை தடை செய்துள்ளது.

இந்த தடையை கண்டித்து வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஷ்ய அரசு தனக்கு சொந்தமான செயலியில் பயனர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், வாட்ஸ் அப் செயலியின் செயல்பாட்டை தடுக்க முயற்சித்தது. 10 கோடி பேருக்கும் மேற்பட்ட பயனர்கள் தகவல் தொடர்புக்கு பாதிப்பை ஏற்படுத்த முயற்சி செய்கிறது.ரஷ்ய பயனர்களுக்கு தொடர்ந்து சேவையை வழங்க எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் தொடர்ந்து செய்கிறோம். இவ்வாறு வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், மற்றொரு முன்னணி செயலியான டெலிகிராம் சேவையிலும் அந்நாட்டு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘ரோஸ்கோம்நாட்சோர்’ கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

error: Content is protected !!