Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கஞ்சா விற்ற மூதாட்டி கைது- திருச்சியில் பரபரப்பு

திருச்சி ராம்ஜி நகர் மாரியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்பனை நடப்ப எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகிக்கும் வகையில் நின்ற 64 வயது மூதாட்டியை பிடித்து
விசாரித்தனர். இதில் அவர் 50 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல்
திருச்சி பொன்மலை மேல கல்கண்டார் கோட்டை அருகே புகையிலை பொருள்கள் விற்பதாக பொன்மலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அங்கு சோதனை நடத்தி புகையிலை விற்ற அதே பகுதியைச் சேர்ந்த ஆல்வின் (25) வாலிபரை கைது செய்தனர் பின்னர் ஜாமினில் விடுவித்தனர். அவரிடம் இருந்து 60 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

error: Content is protected !!