திருச்சி மாநகராட்சி மண்டலம் 2 – க்கு உட்பட்ட வார்டு – 33 ல் 2024-25 பொது நிதியிலிருந்து
ரூ.25 லட்சத்தில் கவுன்சிலர் அலுவலகம், மாநகராட்சி பல்நோக்கு கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.மண்டல குழு தலைவர் மதிவாணன் தலைமை வகித்தார்.
துணை மேயர் திவ்யா தனக்கோடி வரவேற்றார். மண்டல குழு தலைவர் ஜெய நிர்மலா முன்னிலை வகித்தார்.விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஸ் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி பல்நோக்கு கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் கவுன்சிலர் அறையில் வார்டு கவுன்சிலரும், துணை மேயருமான திவ்யா தனக்கோடியை இருக்கையில் அமர வைத்து அமைச்சர் மகேஸ் வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் உதவி ஆணையர் ஜெயந்தி,செயற்பொறியாளர் செல்வராஜ்,உதவி செயற்பொறியாளர் இப்ராஹிம்,இலைநிலை உதவியாளர் ரவிக்குமார்,மாவட்ட துணை செயலாளர் கவுன்சிலர் லீலா வேலு, திமுகபகுதி செயலாளர் டி.பி.எஸ்.எஸ்.ராஜ்முகமது,வட்ட செயலாளர்கள் முகேஷ்குமார்,எடிங்டன், தனக்கோடி,சுரேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள் மாநகராட்சி பணியாளர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

