திருச்சி மாவட்டம் துறையூர் வடக்கு தெருவை சேர்ந்த வர் விக்னேஷ். இவரது மனைவி சுகன்யா (23). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது. சுகன்யாவை பிரசவத்துக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவம னையில் சேர்த்தனர். அங்கு கடந்த 11ம்தேதி அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து பிரசவ வார்டில் தாய்க்கும், சேய்க்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு உதவியாக உறவுக்கார பெண் ஒருவர் இருந்தார். அவர் நேற்று காலை வெளியில் சென்றதாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று காலை 7 மணியளவில் பக்கத்து பெட்டில் இருந்த மீனாட்சி (38) என்பவர் குழந்தைக்கு தடுப்பூசி போட டாக்டர் அழைக்கிறார். என்னிடம் குழந்தையை கொடுங்க. தடுப்பூசி போட்டு வருகிறேன் என கூறி சுகன் யாவிடமிருந்து குழந்தையை வாங்கி சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சுகன்யா, தடுப்பூசி செலுத்தும் இடத்துக்கு சென்று பார்த்த போது அங்கு மீனாட்சியை காணவில்லை. அவர் குழந்தை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனால் சுகன்யா கதறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக சுகன்யா அரசு மருத்துவமனை காவல் நிலையத் தில் புகார் கொடுத்தார். இதையடுத்து பிரசவ வார்டில் உள்ள பதிவேட்டை போலீசார் சோதனையிட் டபோது அதில் மீனாட்சி என்ற பெயரே பதிவாக வில்லை. இதனால் அவர் குழந்தை கடத்த திட்ட மிட்டு 2 நாட்களுக்கு முன் பிரசவ வார்டுக்கு வந்ததும், காலியாக இருந்த சுகன்யாவின் படுக்கைக்கு அடுத்த படுக்கையில் படுத் துக்கொண்டு அவரிடம் நன்றாக பேச்சுக்கொடுத்து பழகியதும், சுகன்யாவின் உறவினர் வெளியில் சென்ற நேரம் பார்த்து குழந்தையை கடத்தி சென்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அங்குள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் குழந்தையை கடத்திச் சென்ற பெண் உருவம் பதிவாகியுள்ளது. அதை வைத்து அந்த பெண் யார், எந்த ஊரை சேர்ந்த வர் என தீவிரமாக விசா ரணை நடத்தி னார்கள். பிரசவ வார்டில் வார்டில் ஆண் குழந்தை கடத்தப் கடத்தப்பட்ட சம்பவம் திருச்சி அரசு மருத்துவமனை வளாகத் தில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. இது குறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிந்து சேலம் தம்மம்பட்டியை சேர்ந்த மீனாட்சி என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில், செவிலியர் உடை அணிந்து தடுப்பூசி போடுவதாக கூறி குழந்தையை எடுத்து சென் றதும், குழந்தை இல்லாத ஏக்கத்தில் எடுத்து சென்றதாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், குழந்தையை திருடி சென்ற பெண், தன் வைத்திருந்த “பை ஒன்றை” மருத்துவமனையில் விட்டு சென்றுள்ளார். போலீசார் அந்த பையை எடுத்து பார்த்த போது, அதில் அந்த பெண்ணின் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தது. தொடர்ந்து, மாநகர் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சி பதிவுகளை ஆய்வு செய்தபோது, அரசு மருத்துவமனையில் இருந்து ஆட்டோ மூலம் பஸ் நிலை யத்திற்கு சென்றது தெரிய வந்தது.மேலும் போலீசார் மீனாட்சி செல்போனை ஆய்வு செய்து அவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து, போலீசார் துரிதமாக செயல்பட்டு திருச்சி அருகே மதியம் 2 மணியளவில் தம்மம்பட்டி என்ற இடத்தில் மீனாட் சியை குழந்தையுடன் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து மீனாட்சி இடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து போது பல்வேறு திடிக்கிற தகவல்கள் தெரிய வந்துள்ளது.
குழந்தையை கடத்தியமீனாட்சிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகன் இருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மீனாட்சி பிரித்து இரண்டாவதாக தப்பம்பட்டியை சேர்ந்த வாலிப ர்ரை திருமணம் செய்து கொண்டார்.என் நிலையில் கர்ப்பமான மீனாட்சிக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டு கருவிலே குழந்தை கலைந்து விட்டது.இது குறித்து மீனாட்சி கணவர் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் தகவலை தெரிவிக்காமல் தொடர்ந்து ஏமாற்றி வந்து உள்ளார்.ஒரு கட்டத்தில் அவருக்கு வீட்டில் வளைகாப்பு திருவிழாவும் நடந்து உள்ளது அப்பவும் மீனாட்சி தான் கர்ப்பம் இல்லை என்பதை சொல்லாமல் தொடர்ந்து நாடகமாடி வந்தார்.என் நிலையில் 10 மாதம் நெருங்கிய நிலையில் குழந்தை பிறக்க வேண்டும்.இல்லாத குழந்தை எப்படி வரும் என்று யோசித்தமீனாட்சி ஏதாவது பிறந்த குழந்தையை திருடி சென்ற கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் காண்பித்து தப்பித்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டார். இதையடுத்துதிருச்சி அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மீனாட்சி வந்து அங்கு எந்த கர்ப்பிணி பிரசவத்திற்கு தயாராக இருக்கிறார் என்பதை ஆராய்ந்து உள்ளார். அப்பொழுது தான் சுகன்யாவிற்குஇன்னும் ரெண்டு நாட்களில் குழந்தை பிறந்து விடும் என்று தெரியவந்தது இதையடுத்துமீனாட்சி தனக்கு கருக்கலைப்பு நடந்து விட்டது என்று கூறி அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டில்அனுமதிக்கப்பட்டு சுகன்யாவுக்கு எப்பொழுது குழந்தை பிறக்கும் என்று காத்திருந்து குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தையை கடத்திக் கொண்டு தனது மாமியார் வீட்டுக்குசெல்ல திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது.
இதன் மூலம் மீனாட்சி கர்ப்பமாக நாடகமாடியது அம்பலமானது.
கைது செய்யப்பட்ட மீனாட்சி திருச்சி நீதிமன்றத்தில் ராஜபடுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

