Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

MNராஜம்,டைரக்டர் SPமுத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து கலைஞர் நூற்றாண்டு நினைவை போற்றிடும் வகையில், கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளை இன்று வழங்கினார். கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை பொறுத்த வரையில் ஒவ்வொரு ஆண்டும் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விருதாளர்களுக்கு ரூ. 10 லட்சம் மற்றும் நினைவு பரிசும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் படி இன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருதினை வழங்கினார்.

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம், முத்த பழம் பெரும் திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் ஆகியோருக்கு கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அவர்களது குடும்பத்தினர் மற்றும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!