Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: குழந்தை உட்பட 2 பேர் பலி

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பன்னு மாவட்டத்தில் மிர்யான் காவல் நிலையம் அருகே மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
அதில் இணைத்து வைக்கப்பட்டு இருந்த டைம் பாம் ஒன்று திடீரென வெடித்து உள்ளது. இந்த சம்பவத்தில் குழந்தை உள்பட 2 பேர் பலியானார்கள். அடுத்தடுத்து பல கடைகள் இருந்த பகுதியில் ஏற்பட்ட இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிக்கி 17 பேர் காயமடைந்தனர்.
எனினும் போலீசார் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் பலர் தீவிர சிகிச்சை பெறும் நிலையில் உள்ளனர்.
அந்த பகுதியை தங்களுடைய கட்டுக்குள் கொண்டு வந்த போலீசார், தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு கைபர் பக்துன்குவா கவர்னர் பைசல் கரீம் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், வருத்தமும் தெரிவித்து கொண்டார்.

error: Content is protected !!