Skip to content

கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் ஜப்பான் காரர்கள் 50 பேர் தரிசனம்

ஜப்பான் நாட்டை சேர்ந்த 50 பேர் கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சுவாமி தரிசனம்: 20 நிமிடம் தியானம் செய்தனர் .

ஜப்பான் நாட்டின் தோக்கியோ மாகாணத்தை சேர்ந்த 50 பேர், தமிழ்நாடு முழுவதும் கடந்த 30 நாட்களாக ஆன்மீக தலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரூர் மாநகர் மையப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் வருகை தந்தனர், குறிப்பாக கருவூரார் சித்தர் சன்னதியை பார்ப்பதற்காகவே

வருகை தந்து சித்தர் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் கோவில் உள்ள அனைத்து இடங்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து, கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சுமார் 20 நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்வு அப்பகுதியில் பக்தர்களிடையே ஆச்சரியத்தையும், ஆன்மீக உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

கோபால் பிள்ளை சுப்பிரமணியம் குழுவினர் சார்பில் அழைத்து வரப்பட்ட இவர்கள், தமிழ்நாட்டின் பல்வேறு ஆன்மீக தலங்களை தரிசித்து வருகின்றனர்.

error: Content is protected !!