Skip to content

அரியலூர் … பெண் சந்தேக மரணம்…கொலையா? தற்கொலையா?

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். அவரது மனைவி பெயர் பிரியா. இவர்களுக்கு 10 வயது பெண் குழந்தை உள்ளது.

செல்வம் கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அவர் வருடத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், பிரியா தன் வீட்டின் பின்புறம் உள்ள வீட்டில் வசித்து வந்த ராஜா என்பவருடன் திருமணத்திற்கு மீறிய

உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், செல்வம் அனுப்பிய பணத்தை ராஜாவிடம் அவ்வப்போது கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது செல்வம் ஊருக்கு வர உள்ள நிலையில், பணம் மற்றும் நகைகளை திருப்பிக் கொடுக்குமாறு இருவரிடமும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று ராஜா வீட்டிற்கு சென்ற பிரியா, காலை சேலையில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்ததாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், வீட்டை பூட்டி விட்டு ராஜா வெளியே சென்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற செந்துறை போலீசார், சந்தேக மரணம் என பதிவு செய்து, பிரியா தற்கொலை செய்துக்கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!