திருச்சி எடமலைப்பட்டி புதூர் செட்டியாபட்டி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகள் மாரிக்கண்ணு (42). மனநிலை பாதிக்கப்பட்டிருந்த இவர், தனது தம்பி திருப்பதி ராஜாவின் பராமரிப்பில் வசித்து வந்தார். இதற்காக திருச்சி அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையும் பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 20-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தான் வழக்கமாக உட்கொள்ளும் மருந்து எனத் தவறாகக் கருதி, அங்கிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து மாரிக்கண்ணு குடித்துள்ளார். சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்த அவரை, உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி மாரிக்கண்ணு பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

